சத்தியார் கோயில்

சத்தியார் கோயில் இடம்வலம் சாதித்தால்
மத்தியா னத்திலே வாத்தியங் கேட்கலாம்
தித்தித்த கூத்தும் சிவனும் வெளிப்படும்
சத்தியம் சொன்னோம் சதாநந்தி ஆணையே – 730

விளக்கம்:
நம்முடைய உடல், சக்தியாகிய குண்டலினி குடியிருக்கும் கோயிலாகும். இக்கோயிலிலே நாம் நம்முடைய மனத்தை மத்தியிலே நிலைபெறச் செய்து, இடப்பக்கமும் வலப்பக்கமும் மாற்றி மாற்றி பிராணப் பயிற்சி செய்து வந்தால், சிவநடனத்திற்கு உரிய வாத்திய ஒலிகளைக் கேட்கலாம். வாத்திய ஒலியைத் தொடர்ந்து, சிவபெருமானின் இனிய நடனத்தையும் காணலாம். இந்த உண்மை நந்தியம்பெருமானின் ஆணையாகும்.

சத்தியார் – சக்தியாகிய குண்டலினி
மத்தியானம் – மத்திய தானம் (மத்தியில் இருக்கும் இடம்)

Leave a Reply

error: Content is protected !!